Trending

Whatsapp பயனர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்! இதோ சூப்பர் அப்டேட்

அடிக்கடி பயனர்களுக்காக புதுப் புது அப்டேட்களை கொண்டுவரும் வாட்ஸ் அப் தற்போதும் சூப்பரான ஒரு அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.

அதாவது, வாட்ஸ் அப் செயலியில் ஒரே சமயத்தில் மூன்று குறுந் தகவல்களை பின் செய்துகொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

இந்த வசதியின் மூலம் பயனர்கள் சாட் ஒன்றில் அதிக குறுந்தகவல்களை பின் செய்து கொள்ளலாம்.

Text, Image, Polls போன்றவற்றை பின் செய்துகொள்ள முடியும்.

இந்த மெசேஜ்கள் 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது 30 நாட்கள் வரையில் சாட்களின் மேல் பேனர் போல காட்சியளிக்கும். அதிகமாக குறுந்தகவல்களை பின் செய்யும்போது அண்மையில் பின் செய்யப்படும் தகவல் சாட்களில் முதலில் தெரியும்.

இந்த குறுந்தகவல்களை பின் செய்ய குறிப்பிட்ட மெசேஜ்ஜை அழுத்தி பிடித்து பின் pin ஆப்ஷனை க்ளிக் செய்து, எவ்வளவு நேரம் பின் செய்யப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *