Trending

Good Friday கிறிஸ்தவர்களின் கொண்டாட்ட நாள் கிடையாது! ஏன் தெரியுமா?

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் புனித வெள்ளியும் ஒன்று.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாள் தான் புனித வெள்ளியாகவும், அவர் மீண்டும் உயிர்ந்தெழுந்த நாள் ஈஸ்டர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த புனித வெள்ளி கிறிஸ்தவர்களின் கொண்டாட்ட நாள் கிடையாது. இது அவர்களின் துக்கநாள்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர்நீத்த நாளை நினைவுகூரும் விதமாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இது பெரிய வெள்ளி, கருப்பு வெள்ளி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. புனித வெள்ளி என்பது துக்கம், தவம், உண்ணாவிரதம் ஆகியவற்றை கடைபிடிக்கும் ஒரு நாளாகும்.

பைபிளில் இயேசு கிறிஸ்து சுமார் 6 மணி நேரம் அறையப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இயேசுவை சிலுவையில் அறையும் போது அவரது மரண தருவாயில்,  3 மணி நேரமாக எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை அன்று உயிர்த்தெழுந்தார்.  அந்த நாள் தான் ஈஸ்டர் என கொண்டாடப்படுகிறது.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 23 வரையிலான காலக்கட்டத்தில் தான் புனித வெள்ளி கடைபிடிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு புனித வெள்ளி மார்ச் 29-ம் திகதியான இன்று கொண்டாடப்படுகிறது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *