Trending

Covishield தடுப்பூசியால் பக்கவிளைவுகள் 

கொரோனாவைக் கட்டுப்படுத்த போடப்பட்ட Covishield தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை தயாரித்த AstraZeneca நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

Covishield காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில்  AstraZeneca நிறுவனம் சமர்ப்பித்த ஆவணத்தில்,  Covishield தடுப்பூசியால் அரிதாக இரத்தம் உறைதல், இரத்தத் தட்டுக்களின் (Platelets) அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID 19 தொற்றைத் தடுக்க Covishield தடுப்பூசியை AstraZeneca நிறுவனமும் Oxford பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கின.

அதனை Serum Institute of India நிறுவனம் தயாரித்தது.

இந்நிலையில், குறித்த தடுப்பூசிக்கு எதிராக பிரித்தானியாவில் மாத்திரம் AstraZeneca நிறுவனத்திற்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *