Trending

நீங்கள் இதை அவதானித்துள்ளீர்களா?

பல கடிகாரங்களில் விளம்பரங்களில் கடிகாரங்களில்  காட்டப்படும் நேரம் 10:10 என்பதை அவதானித்துள்ளீர்களா?

ஏனென்றால், 10:10 என்பது பார்வைக்கு இன்பத்தை தரும் நேரமாக மக்களால் கருதப்படுகிறது.

கடிகாரத்தின் முட்கள் 10:10 என காட்டும் போது அது மக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன் ஒரு வகையான புன்னகையை மக்களின் முகத்தில் உருவாக்குகின்றது.

நேரம் 10:10ஐ காட்டும் போது நிமிடக் கைகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இல்லாது பிரிந்து நிற்கின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் கடிகாரத்தின் முகத்தில் பிராண்ட் பெயர், லோகோவைப் பார்க்க முடிகிறது.

இது கண்ணை ஈர்க்கும் ஒரு சமச்சீரானதும் சீரானதுமான தோற்றத்தை கொடுக்கிறது. சில கலாச்சாரங்களில் எண் 10 அதிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படுகிறது. எனவே நேரத்தை 10:10 ஆகக் காண்பிப்பது வாங்குபவர்களின் ஆழ் மனதில் கடிகாரத்துடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது.

விளம்பரங்களில் 10:10ஐப் பயன்படுத்துவது கடிகாரங்களை கவர்ச்சிகரமானதாகவும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இருக்கவும் பயன்படுத்தும் ஒரு எளிய பயனுள்ள வழியாகும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *