Trending

தினம் 5 நிமிடம் மட்டுமே வேலை!  வருடத்துக்கு 62 இலட்சம் சம்பாதிக்கும் பெண் 

வேகமான உலகில் பணம் சம்பாதிக்க பலரும் புதிய புதிய வழியைத் தேர்வு செய்கிறார்கள்.

ரேச்சல் ஜிமெனெஸ் என்ற அமெரிக்கப் பெண் ஒரு நாளைக்கு ஐந்து நிமிடங்களைச் செலவழித்து ஆண்டுக்கு $74,000 (ரூ. 62 இலட்சம்) சம்பாதித்துக்கும் தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அறிக்கைகளின்படி, ரேச்சல் ஜிமெனெஸ் 36 வயதான பெண் சைட் ஹஸ்டல்களை செய்கிறார்.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற சந்தையான Etsy என்ற ஆன்லைன் இணையதளத்தில் சுயமாக ப்ரிண்ட் செய்யப்பட்ட பொருட்களை விற்பதன் மூலம் அவர் அதைச் செய்கிறார்.

ப்ரிண்டட் பொருட்கள் செய்து முடித்து விற்பனைக்கு தயாராகும் போது, ஒருவர் தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே செலவிட வேண்டும் என்று அவர் குறிப்பிடுகின்றார்.

அதுமட்டுமின்றி, அவர் Money Hacking Mama என்ற வலைப்பதிவையும் நடத்துகிறார். அங்கு அவர் பணம் சம்பாதிப்பது எப்படி என்று விளக்கி மக்களை ஊக்குவிக்கிறார்.

இந்த விடயம் வேலை தேடும் பலருக்கு ஆர்வத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *