Trending

உலக வனவிலங்குகள் தினம்

வனவிலங்கு பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ஆம் திகதி உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகிறது.

03.03. 2022 உலக வனவிலங்கு தினத்தின் கருப்பொருளாக “சுற்றுச்சூழல் மறுசீரமைப்பின் மூலம் முக்கிய உயிரினங்களை அழிவிலிருந்து மீட்டெடடுத்தல்” என்பது திகழ்ந்தது.

உலகின் வன விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2013 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இந்த நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகம், வாழ்விட அழிவு, காலநிலை மாற்றம் சூழல் மாசுபாடு ஆகியவை உலகெங்கிலும் உள்ள வனவிலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக காணப்படும் காரணிகளாகும்.

வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கு பல்வேறு முயற்சிகள், நிலையான நடைமுறைகள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவை அவசியம்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *