Trending

உங்க படுக்கையறை இந்த நிறத்தில் இருந்தால் அதிர்ஷ்டமாம்!

நீங்கள் ஒரு புதிய வீட்டினை கட்ட திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் வாஸ்து பார்த்து கட்டுவது அவசியம்.

அது எமது வாழ்க்கையில் நல்ல சில திருப்பங்களை ஏற்படுத்தும்.

கட்டிய வீடு ஒன்றை வாங்குவதாக இருந்தாலும் வாஸ்து படி உங்கள் படுக்கையறை சீரமைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்போதும் சரிபார்ப்பது நல்லது.

இது ஒருவரின் வாழ்க்கையிலும் நல்ல வளங்களை தரவல்லது.

படுக்கையறையின் அமைப்பு

பொதுவாக, வீட்டில் உள்ள  படுக்கையறையின் திசை வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்க வேண்டும்.

ஒரு குழந்தையின் படுக்கையறை மேற்கு நோக்கியும், விருந்தினர் படுக்கையறை கிழக்கு நோக்கியதாகவும் இருக்க வேண்டும்.

உங்கள் படுக்கையை கதவுக்கு எதிரே வைக்க வேண்டாம். அதேபோல, தெற்கு அல்லது கிழக்கு திசையில் தான் தலை வைத்து தூங்க வேண்டும்.

அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும்.

ஒருபோதும், தலை வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்க வேண்டாம். வடக்கு நோக்கி உறங்குவதால், மனநலம் பாதிப்படைவதோடு, ஆயுளும் குறையும்.

ஒரு படுக்கையறைக்கு ஏற்ற வண்ணங்கள்

  1. வெளிர் ரோஜா
  2. சாம்பல்
  3. நீலம்
  4. பச்சை
Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *