Trending

உங்கள் திருமண உறவில் விரிசல் விழாமல் இருக்கனுமா?

கண்ணும் கண்ணும் கலந்து காதல் புரிந்து ஊடலோடு திருமணம் செய்து கொண்ட தம்பதியர் கூட பிரிவை அதிகம் சந்தித்து வருவது அதிகரித்துள்ளது.

உறவுகளில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றும் பழக வேண்டிய பலவற்றை நாம் தெரிந்து கொள்வோம்.

மனம் விட்டு பேசுங்கள்  

நேரத்தை ஒதுக்கி, கோபம், சோர்வு மற்றும் மன குழப்பங்கள் இல்லாத சமையத்தில் இருவரும் பேச வேண்டும்.  ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் சரியாக பேசிக்கொள்ளாத காரணத்தினால் இடைவெளிகள் ஏற்படுகின்றன.

இந்த இடைவெளிகளே நாளடைவில் விரிசலுக்கு காரணமாகின்றன. குடும்ப உறவுகளை தக்க வைத்துக்கொள்ள மனம் விட்டு பேசுங்கள்.

துணையிடம் வெறுப்பு வேண்டாம் 

இறுதி வரை ஒன்றாக இணைந்து வாழ்வது இருவர் மட்டும்தான் என்னும் மனநிலையை வலுவாக்குங்கள். குறைகளை சுட்டிகாட்டி பேசுவதும் மனதில் வெறுப்பை உண்டாக்கும். முக்கியமாக பிரச்சனைகளைப் பெரிதாக்காமல் இருவரும் பொறுமையாக பேசி முடிவு செய்ய வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக வைத்திருங்கள்.

அன்பை வெளிப்படுத்துங்கள் 

மனைவியின் தேவையை உணர்ந்து செயல்படும் கணவனுக்கு தாம்பத்தியமும் இனிமையாக கிடைக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.  உறவுகள் முன்னிலையிலும் பொதுப்படையான அன்பை வெளிப்படுத்த இருவருமே தயங்க வேண்டாம் .எந்த காரண காரியமும் இல்லாமல் அடிக்கடி இரண்டு குடும்பத்தாரரையும் பாசத்தோடு வீட்டிற்கு அழைப்பதும் அதேப் போல் அவர்களை சந்திக்க செல்வதும் குடும்ப உறவுகளை மேலும் வலுவடைச் செய்யும் இதனால் பகைமையும் ஒழியும்.

ஆழமான முத்தம் 

உங்கள் துணை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் போதெல்லாம் ஒரு முத்தத்தைக் கொடுத்துவிடுங்கள். எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் இந்த அன்பான ஊடல் பரிசு உங்கள் துணையின் சோர்வை விரட்டியடிக்கும். உங்கள் மீதான கோவத்தையும் பொடியாக்கிவிடும். நேரம் காலம் இல்லாமல் கொடுக்கும் இந்தப் பரிசு நீங்கள் தேடி தேடி வாங்கும் விலை மதிப்புள்ள பரிசை விட சிறந்த பரிசு.

 

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *