Trending

அட்சய திருதியையில் தங்கத்திற்கு பதிலாக இந்த பொருளை வாங்கினாலே பேரதிர்ஷ்டம்

அட்சய திருதியை மே 10 அன்று கொண்டாடப்பட உள்ளது.

காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் திகதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிவருவதால் அட்சய திருதியை அன்று நகை வாங்க பலரால் முடியாது.

அதனால் அதற்கு பதில் வேறு சில பொருட்களை வாங்கினால் நல்லது.

அன்றைய நாளில் என்ன வாங்கினாலும் அது உகந்ததே.

அன்றைய நாளில் வாங்கும் எந்த பொருளும் வீட்டில் குறைவின்றி இருக்கும் என்பதே பொருள்.

ஆகவே எதையும் வாங்கலாம். உப்பு, அரிசி, வலம்புரிச் சங்கு, சோழிகள் மற்றும் தேவையான ஆடைகள் ஒரு சிறு பாத்திரம் என எதை வேண்டுமானாலும் வாங்கலாம்.

பெண் பார்ப்பது, நிச்சயதார்த்தம் செய்தல் சுபகாரியங்களை இந்தநாளில் செய்வது நல்லது.

அரிசி வீட்டில் குறையில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அன்றைய தினம் அரிசி வாங்கி வைக்கலாம்.

அந்த தினத்தில் புதிதாக வாங்கிய அரிசியிலிருந்து சிறிதளவு எடுத்து யாரேனும் ஒருவருக்கு தானம் அளிப்பதால் பல மடங்கு புண்ணியமும் தானமும் உங்களின் குடும்பத்திர்கு வந்து சேரும்.

அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் புதிதாக வெள்ளை நிற வலம்புரிச் சங்கை வாங்கி அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து வீட்டின் பூஜையறையில் வழிபடுவதால்  மகாலட்சுமியின் அருட்கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அட்சய திருதியை அன்று மங்கலகரமான மஞ்சள் மற்றும் குங்குமத்தை வீட்டிற்கு வாங்கி வந்தால் நல்லது. அது நன்றாக பலமடங்கு பெருகும். எப்போதும் வீட்டில் குறையாமல் இருக்கும். அதனால் வீடே லட்சுமி கடாச்சமாக இருக்கும் என்பது ஐதீகம்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *