Sports

Kiki Challenge ஏன் தடை செய்யப்பட்டடுச்சி தெரியுமா?

ஒரு சில மாதங்களுக்கு முன்னாடி ரொம்ப பிரபலமா பேசப்பட்ட ஒரு விஷயம் தான் Kiki Challenge.

சிலருக்கு இப்படின்னா என்னன்னே தெரியாம இருக்கும். அதப்பத்தின ஒரு சுவாரஸ்யமான தகவலத்தான் இந்த பதிவில நீங்க படிக்க போறீங்க.

இது ஒரு வகையான Challenge. இது முதல்ல Tiktokல தான் அறிமுகமாகி பரவலா செய்யப்பட்டு வந்திச்சு.

இதுல என்ன செய்யணும்னா கார் ஓடிட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு இடத்துல கார நிப்பாட்டிட்டு கார்ல இருந்து இறங்கி Kiki challengeனு சொல்லி டான்ஸ் ஆடணும்.

ரொம்பவே வேடிக்கையா இருக்கு இல்ல. ஆனா இத பல பேர் செய்து இருக்காங்க.

சிலருக்கு இது தெரியாம இருக்கலாம். ஏன் அப்படி தெரியாம போச்சுனதுக்கான காரணம் என்னன்னு சொல்றேன் கேட்டுகோங்க.

ஒரு இடத்துல கார திடீர்னு நிப்பாட்டி இறங்கி ஆடும் போது பின்னாடி வர்ற வாகனங்களால விபத்துகள் ஏற்பட்டதாலும் நிறைய வாகன நெரிசல் ஏற்பட்டதாலும் இந்த விசயத்த பல நாடுகள்ல தடை செய்துட்டாங்க.

வெள்ளக்கார தம்பிமாருக்கு தான இப்படி அதிகமா தோணும். ஆனா என்ன ஒரு நல்ல விஷயம்னா அது எங்கட நாட்டுல பெருசா பரவல. ஒருவேளை எங்கட நாட்டிலேயும் இப்படி ஒரு சேலஞ்ச் அறிமுகமா இருந்துச்சுன்னா டிராபிக் போலீஸ் ஓட நிலமை என்னன்னு யோசிச்சு பார்த்திங்களா?

ஏன்னா எங்கட ஆக்கள் சாதாரண ஆட்டமா போடுவாங்க. சும்மா வெறிதனமால ஆடுவாங்க. சிலர் வெறிலயும் ஆடுவாங்க. அது வேற விஷயம்.

அதனாலதானாம் இந்த சேலஞ்ச பல நாடுகள்ல தடை பண்ணி வச்சுட்டாங்களாம். அதனால இந்த Trend படிப்படியாக குறைஞ்சு இப்ப இல்லாமலே போயிடுச்சு.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *