Information

Instagram இல் பிரபலமாகனுமா? இதோ சூப்பர் ஐடியா

Instagram-ல் நீங்களும் பிரபலமாக இந்த குறிப்புகளை பின்தொடர்ந்தாலே போதும்.

1. கமெண்டுகளுக்கு பதில்: நீங்கள் பதிவிடும் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு வரும் கருத்துகளுக்கு பதிலளிப்பது பார்வையாளர்களுடன் தொடர்பை வளர்க்க உதவுகிறது.

2. ஹைலைட்ஸை ரீல்களாக மாற்றவும்: நீங்கள் சேமித்த கதையின் சிறப்பம்சங்களை சிரமமின்றி ரீல்களாக மாற்றுவதன் வாயிலாக பார்வையாளர்களைக் கவர முடியும்.

3. பாடல்களின் லைப்ரரியை உருவாக்கவும்: நீங்கள் சொந்தமாக பதிவிடும் வீடியோக்களில் இருக்கும் ஆடியோவை சேமித்து வைக்கவும். ஏதேனும் ரீல்ஸ்களில் பாடல்கள் நன்றாக இருந்தால், அதனை சேமித்து வைக்கவும்.

4. படங்களுக்கு ஏற்ற பாடல்: நீங்கள் பதிவிடும் படங்களுக்கு ஏற்ற வகையில் தானாக பாடல்களை இணைத்து கொள்ளும் இன்ஸ்டாகிராம் அம்சத்தைப் பயன்படுத்துங்கள்.

5. ரீல் டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தவும்: ரீல்களை விரைவாக உருவாக்க, முன்பே வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தி நேரத்தை சேமிக்கவும்.

6. GIFகளுடன் பதில்கள்: GIFகள் வாயிலாகக் கருத்துகளுக்குப் பதிலளிப்பது ஒரு சிறந்த ஈர்க்கும் முறையாகப் பார்க்கப்படுகிறது.

7. குரல் பதிவுகளை இணைக்கவும்: எடிட்டிங் மெனுவில் நேரடியாக குரல் பதிவுகளை இணைப்பதன் வாயிலாக உங்கள் ரீல்களில் கூடுதல் தனித்துவத்தைச் சேர்க்கலாம்.

8. மாஸ்டர் லிப் Sync: ஒலியின் வேகத்தை சரிசெய்து, குரலைப் பதிவுசெய்வதன் வாயிலாக லிப் Sync திறன்களை மேம்படுத்தவும்.

9. ரீல்களில் தலைப்பு: உங்கள் ரீல்களில் தலைப்புகளைச் சேர்ப்பதன் வாயிலாக பயனுள்ள சமூக வலைத்தள வாசிகள் அதை எளிதில் அணுக முடியும்.

10. ரீல்களை ஒழுங்குபடுத்துங்கள்: உங்கள் ரீல்களை எப்போது பதிவேற்ற வேண்டும், எது சரியாக சமயம் என்பதை தீர்மானியுங்கள். இது உங்கள் வீடியோ வைரலாகும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *