Information

2024ல் காத்திருக்கும் ஆபத்து? மிரள வைக்கும் பாபா வாங்காவின் கணிப்புகள்

பல்கேரியாவைச் சேர்ந்த மிகவும் பிரபலமான ஒரு தீர்க்கத்தரசியான பாபா வாங்கா எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணித்து கூறும் ஆற்றலைக் கொண்டவர்.

இவரது பல கணிப்புகள் இன்று வரை நடந்துள்ளன.

12 வயதில் இருக்கும் போது பாபா வாங்காவிற்கு பலத்த சூறாவளியால் பார்வை பறிப்போனது. இந்நிகழ்வுக்கு பின் அவர் எதிர்காலத்தை கணிக்குத் திறனைப் பெற்றதாக நம்பப்படுகிறது.

அவரது கணிப்புகளில் பல முக்கியமான நிகழ்வுகள் நிகழ்ந்துவிட்டன. முக்கியமாக 2024 ஆம் ஆண்டில் நடக்கவிருப்பதாக இவர் கணித்துள்ள சில மிரள வைக்கும் கணிப்புகளைக் காண்போம்.

மூன்றாம் உலகப் போர்

பாபா வாங்கா மூன்றாம் உலகப் போர் குறித்தும், இந்த போரானது முதல் மற்றும் இரண்டாவது உலகப் போரை விட அதிகளவில் சேதத்தை ஏற்படுத்துவதாகவும் கணித்துள்ளார்.

இயற்கை பேரழிவுகள்

பாபா வாங்காவின் குறிப்புகளில்  வரக்கூடிய ஆண்டுகளில் பூகம்பம், சுனாமி முதல் எரிமலை வெடிப்புகள் வரை, பல இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்து, மோசமான உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்று  கணித்துள்ளார்.

தொற்றுநோய்கள்

வரக்கூடிய ஆண்டுகளில் உலகம் தொற்றுநோய்களுடன் போராடும் என்று பாபா வாங்கா தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி

பாபா வாங்காவின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளுள் ஒன்று கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும். இவர் கணித்தது போன்றே இங்கிலாந்து மற்றும் ஜப்பான் போன்றவை பொருளாதார நெருக்கடியை சமாளிக்கின்றன.

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றத்தால் மோசமான விளைவுகளை மக்கள் சந்திக்க நேரிடும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.

உலகின் முடிவு

பாபா வாங்காவின் மிரள வைக்கும் ஒரு முக்கியமான கணிப்பு தான் உலகம் 5079-ல் அழியும் என்பது. இவரது கணிப்புகளின் படி, இவர் இந்த ஆண்டு வரை மட்டுமே கணித்துள்ளார். இதனால் தான் உலகமானது 5079 வரையில் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *