Information

வௌவாலுக்கு கண்ணு தெரியாதா?

பெரும்பாலான மக்களிடையே வெளவால்களுக்கு கண் பார்வை இல்லை என்ற கருத்து பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இக்கூற்று உண்மையில் தவறானது. சில வகை வெளவால்களுக்கு கண்பார்வை குறைவாக உள்ளது. அதனால் உணவுக்காக செல்லவும் வேட்டையாடவும் எதிரொலியினை பயன்படுத்துகிறது.

உண்மையில் பல வெளவால்கள் நன்கு வளர்ந்த பெரிய கண்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக பகலில் அல்லது நன்கு ஒளிரும் சூழலில் கூட சில வௌவால்களால் பார்க்க முடியும்.

வெளவால்கள் இரையைக் கண்டறிவதற்கும், தடைகளைத் தவிர்ப்பதற்கும், சுற்றுப்புறங்களுக்குச் செல்லவும் பார்வை, எதிரொலி போன்றவற்றை பயன்படுத்துகின்றன.

எக்கோலொகேஷன் என்பது ஒரு அதிநவீன உயிரியல் சோனார் அமைப்பாகும். இது வெளவால்கள் அதிக அதிர்வெண் ஒலிகளை வெளியிட அனுமதிக்கிறது. மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது வெளவால்களுக்கு சிறந்த கண்பார்வை இல்லை என்றாலும் அவை பார்வையற்றவை அல்ல.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *