Information

வியக்க வைக்கும் நீலமணி பூ

நீலமணி பூ எனப்படுவது அத்திலாண்டிக் பக்கம் அமைந்துள்ள ப்ரிட்டிஷ், ஸ்பெய்ன் போன்ற நாடுகளில் அதிகமாக காணக்கூடியதாக இருக்கும். சித்திரை மாதத்தின் நடுப்பகுதியில் இப் பூக்கள் அதிகமாக பூக்கின்றது.

இதை மாலையாக கோர்த்து அதை அணிந்து கொள்பவர்கள் உண்மையை மட்டுமே பேசுவார்கள் என நம்பப்படுகிறது. அத்துடன் இப்பூவை வைத்திருக்கும் போது நீங்கள் விரும்பியவர்கள் உங்கள் மேல் அன்பை பொழிவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இவை வனப்பகுதிகளுக்கு உரிய தாவரம் ஆகையால் ஈரலிப்பான வடிகட்டப்பட்ட மண்ணிலே வாழக்கூடியதாக இருக்கிறது. இவை ஆங்கிலத்தில் பல்வேறு வகைப்பட்ட பெயர்களால் கூறப்படுகிறது. அவையாவன Bluebell, common bluebell, English bluebell, British bluebell, wild hyacinth, wood bell, fairy flower, bell bottle.

இத் தாவரங்கள் அதிகமாக இங்கிலாந்தில் காணப்படுகிறது. இந்தப் பூக்களில் மனிதனுக்கு ஆபத்தை தரக்கூடிய நச்சு தன்மை இருப்பதால் இதை மருத்துவங்களிலோ அல்லது உணவாகவோ உட்கொள்ள முடியாது. மீறி உட்கொள்ளும் பட்சத்தில் தீவிரமான வயிற்றுவலிக்கு ஆளாக நேரிடும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *