Information

முகில்கள் இவ்ளோ வேகமா நகருமா?

நாம தினமும் அவதானிக்குற ஒரு விஷயம் தான் முகில்கள எப்பவும் வானத்துல முகில்கள் இருந்து கொண்டு தான் இருக்கும். மழைக்காலம் என்றால் கார்முகிலும் கோடை காலத்தில் வெள்ளை முகிலும் அந்தி சாயும் பொழுது செந்நிற முகில்களும் எங்க கண்ணுக்கு தெரியும்.

இந்த முகில்கள் என்னதால ஆனதெண்ணு எப்பவாச்சு யோசிச்சு இருக்கீங்களா? இது சிறிய சிறிய நீர் துளிகளாலும் பனிக்கட்டி துகள்களாலயும் ஆனதாம். அதனால முகில்களை நாங்க கையால பிடிக்கும் போது நீர் தன்மைய தான் உணர முடியுமாம். அதனால தான் முகில்களை கைகளாலயே பிடிக்க முடியாதுன்னு சொல்றாங்க.

உலகம் முழுக்க ஈரப்பதங்கள கொண்டு செல்ற வாகனங்கள் தான் முகில்கள்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. இந்த முகில்களோட வேகம் மணித்தியாலத்துக்கு 100 மைல்கள் ஆகும். ரொம்பவே ஸ்பீடா இருக்கு இல்ல.

என்னோட கண்ணுக்கு செம்மறியாடு போல ஒரு முகிலோட தோற்றம் தெரிஞ்சிருக்கு. இப்பிடி உங்களுடைய கண்ணுக்கும் நிச்சயமா தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க எப்பவாவது வானத்துல அவதானிச்சு பாருங்க கண்டிப்பா தெரியும். இந்த மாதிரியான செம்மறி ஆட்டு முகில்களை Mammatusனு சொல்றாங்களாம்.

சில நேரம் நாங்கள் வானத்த அவதானிக்கும் போது அங்க தென்படுற முகில்களோட வடிவம் எங்களுக்கு பழக்கப்பட்டது போல தோன்றுமாம். இப்படி தோன்றுறத சொல்றது Pareidolia. கறுமம் ஒரு பெயரும் வாய்க்குள்ள நுழையுது இல்ல.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *