Information

மின்னல் வேக சமையல் டிப்ஸ்!

  1. முற்றிய தேங்காயை துண்டுகளாக வெட்டுவது சிரமம். அதை பிரீசரில் 10 நிமிடங்கள் வைத்து விட்டு தண்ணீரில் கழுவி கீறினால் ஓடு கழன்று வந்துவிடும்.
  2. பிரிட்ஜ் கதவு எப்போதும் பளிச்சென இருக்க, லிக்விட் சோப்புடன் சொட்டு நீலத்தை நுரை வரும்வரை கலந்து, அந்த நுரையால் துடைத்தால் போதும்.
  3. சவ்சவ் நறுக்கும்போது விரல் பிசுபிசுப்பாகி விடும். சவ்சவ்வை நீளவாக்கில் இரண்டாக வெட்டி ஒன்றோடு ஒன்று தேய்த்து, பின்பு நீரில் கழுவி விட்டு நறுக்கினால் பிசுபிசுப்பாக இருக்காது.
  4. முழு முந்திரி பருப்புகளை விரைவில் பூச்சி அரித்து விடும். அவற்றை ஒன்றிரண்டாக உடைத்து, வெறும் வாணலியில் வறுத்துவிட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாது.
  5. ரோஜா, சாமந்தி பூக்களின் காம்புகள் ஒடிந்த நிலையில் இருந்தால் சாமி படங்களுக்கு வைப்பது சிரமம். ஊதுவர்த்தியின் கீழ்பாகம் போன்ற சிறு குச்சிகளை பூ நடுவில் சொருகி விட்டால் அழகாக பூ சூட்ட முடியும்.
  6. குருமா, கிரேவி வகைகளில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிது காய்ச்சிய பாலை சேர்க்கலாம்.
  7. பாகற்காயுடன் பீட்ரூட், கேரட் கலந்து பொரியல் செய்தால், அதன் கசப்பு தன்மை குறைந்து விடும்.
  8. வெயில் காலத்தில் தயிர் வேகமாக புளித்து விடும். டிபன் கேரியரில் பால் உறை ஊற்றி மேல், கீழ் பாத்திரங்களில் நீர் நிரப்பி வைத்தால் எளிதில் புளிக்காது.
  9. அடைக்கு பருப்பு ஊற வைக்கும்போது கைப்பிடி ஜவ்வரிசியையும் அதனுடன் ஊற வைத்தால் மொறுமொறு அடை கிடைக்கும்.
  10. பால் சேர்த்து பாயசம் செய்யும்போது அடுப்பில் வைத்து சர்க்கரை கலந்தால் திரிந்தது போல் ஆகிவிடும். இறக்கிவிட்டு பொடித்த சர்க்கரை சேர்க்கலாம்.
Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *