Information

மனிதர்கள் வளர்த்த ஆபத்தான செல்லப்பிராணி அழிந்தது எப்படி?

மனிதர்கள் முதன் முதலில் வளர்த்து அழிந்து போன ஆபத்தான செல்லப்பிராணி பற்றி சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆராச்சியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

டியூசியோன் அவுஸ் என்று அழைக்கப்படும் பழங்கால நரிகளின் எச்சங்கள், அர்ஜென்டினாவில் உள்ள தொல்பொருள் தளத்தில் அவற்றின் உரிமையாளர்களுடன் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த நரிகள், அர்ஜென்டினாவின் படகோனியாவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டைக்காரர்களால் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆய்வு, காலநிலை மாற்றம் பல்வேறு காரணிகளினால் அவை அழிவுற்றதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருக்கும் ஓபிலி லெப்ராஸ்ஸர் என்பவரால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வின் போது, கல்லறையில் உள்ள நபருடன் வேண்டுமென்றே புதைக்கப்பட்ட ஒரு நரியின் எச்சங்களையும் குழு கண்டறிந்துள்ளனர்.

நரியின் எலும்புகளில் உள்ள கார்பன் மற்றும் நைட்ரஜன் ஐசோடோப்புகளின் பகுப்பாய்வு, கல்லறையில் புதைக்கப்பட்ட நபரைப் போன்ற தாவரங்கள் நிறைந்த உணவை விலங்கு சாப்பிட்டது என்பதைக் குறிக்கிறது என்று லெப்ராசர் என்ற ஆய்வாளர் கூறியுள்ளார்.

காட்டு நரிகள் பொதுவாக அதிக இறைச்சியை உண்ணும். கல்லறைக்குள் காணப்படும் நரி மனிதன் எதைச் சாப்பிட்டாலும் அதையே தின்று வளர்ந்ததை அதன் எச்சங்கள் நிரூபித்துள்ளது ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தினை கொடுத்துள்ளது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *