Information

மகா சிவராத்திரி நாளில் சிவனுக்கு படைக்க வேண்டிய சக்திவாய்ந்த மலர்கள்

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான மகாசிவராத்திரி இன்று வெள்ளிக்கிழமை (08) கொண்டாடப்பட இருக்கிறது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்கள் விழாக்கோலமாக மாறிவருகிறது.

உலக அளவில் ஆயிரக்கணக்கான சிவன் கோவில்கள் இருந்தாலும் சில சிவன் கோவில்களில் மட்டும் மிகவும் தனித்துவமானவையாக இருக்கின்றன. இன்று சிவனுக்கு சிறப்பு வாய்ந்த மலர்களை சாத்தி வழிப்பட்டால் அதிசயம் நடக்கும்.

மகா சிவராத்திரி நாளில் சிவனுக்கு படைக்க வேண்டிய சக்திவாய்ந்த மலர்கள்

கருஊமத்தை பூ
கருஊமத்தை பூக்களும் பழமும் இல்லாமல் சிவ பூஜை முழுமையற்றதாக கருதப்படுகிறது. இந்த பூக்களையும், பழங்களையும் சிவனுக்கு படைத்து ஒருவர் வழிபட்டால், அவர் அனைத்து துக்கங்களில் இருந்தும் விடுபடுவர். மேலும் திருமண வாழ்வில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

செம்பருத்தி பூ
சிவபுராணத்தின் படி, சிவபெருமானுக்கு சிவப்பு நிற பூக்களை அர்ப்பணித்து வழிபடுவது மிகவும் நல்லது. அதுவும் செம்பருத்தி பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து சிவ மந்திரத்தைக் கூறி அர்ப்பணிப்பதன் மூலம், வாழ்வில் சந்திக்கும் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

மல்லிகைப் பூ
மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து வழிபட வேண்டும். இப்படி செய்வதனால் சிவபெருமானின் அருளால் அதிர்ஷ்டம் எப்போதும் ஆதரவாக இருக்கும். இதனால் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

ரோஜாப் பூ
மகா சிவராத்திரி நாளன்று சிவபெருமானுக்கு ரோஜாப் பூக்களை அர்ப்பணிப்பது மிகவும் நல்லது.

இதனால் ஒருவரது ஆரோக்கியம் மேம்படுவதோடு, திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆளி மலர்
ஆளி மலரை மகா சிவராத்திரி நாளன்று சிவபெருமானுக்கு அர்ப்பணித்து வழிபட்டால், சிவனின் கவனத்தை ஈர்க்கலாம் என நம்பப்படுகிறது.

ஏனெனில் ஆளி மலர் சிவபெருமானுக்கு பிடித்த மற்றொரு பூவாகும். இந்த பூவை சிவனுக்கு படைத்து வழிபடும் நபர், சிவபெருமானுக்கு பிடித்த நபராவார்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *