Information

ப்ரிட்ஜில் கூலிங் குறைந்து விட்டதா?  உடனே இப்படி செய்யுங்க

கோடை காலத்தில், குளிர்சாதன பெட்டியில் குளிர்ச்சி குறைந்துவிட்டால் அது குளிர்சாதன பெட்டியையே சேதப்படுத்தும்.

அதனால் நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், உங்கள் குளிர்சாதன பெட்டி சேதமடையாது.

உங்கள் குளிர்சாதனப்பெட்டியில் உறைந்த பனிக்கட்டி இருந்தால், நீங்கள் அதை ஒரு கூர்மையான பொருளைக் கொண்டு அகற்றக்கூடாது. அப்படி செய்தால், உங்கள் ஃப்ரீஸர் (freezer) துளைகளால் சேதமடையும். இதனால் வாயு கசிவு ஏற்பட்டு உங்கள் குளிர்சாதன பெட்டி குளிர்ச்சியடையாது.

ஃப்ரீஸரில் உள்ள ஐஸ் கட்டிகள் சுற்றிலும் மலைபோல் காட்சியளிக்கும். அது ஃபிரிட்ஜ்ஜின் ஆயுட்காலத்தை குறைத்துவிடும். அதனால் வலதுபுற மேற்புறத்தில் இருக்கும் யூனிட் பட்டனை அழுத்திவிட்டால் போதும் அவையெல்லாம் கரைந்து பின் பக்கம் இருக்கும் டப்பாவில் சேர்ந்துவிடும். அதை நீக்கி தண்ணீரை வெளியேற்றிவிடுங்கள்.

அதிக நீர் கட்டிகளாக இருந்தால் அவை ஃபிரிட்ஜ்ஜிற்கு உள்ளேவும் நீரை வெளியேற்றும் அந்த சமயத்தில் ஃபிரிட்ஜ்சை அனைத்துவிட்டு முற்றிலும் துடைத்துவிட்டு பொருட்களை வையுங்கள்.

தினமும் ஃப்ரிட்ஜ் கதவை திற்கும்போது முழுவதுமாகத் திறந்து பொருட்களை வெளியே எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால், அதில் அனல் காற்று நிரம்பிவிடும். இதனால், குளிர்சாதன பெட்டி விரைவில் குளிர்ச்சியடையாது.

ஃப்ரிட்ஜை அடிக்கடி ஆஃப் செய்து ஆன் செய்தால், அது அதன் கம்ப்ரசரை பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் குளிர்விக்கும் தன்மை குறைந்துவிடலாம்.

ஃபிரிட்ஜ்ஜை மாதம் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வது அவசியம்.

அவ்வாறு சுத்தம் செய்யும்போது பொருட்களை வெளியே எடுத்துவிட்டு, ஐஸ் கட்டிகள் கரைந்து நீர் வெளியேறியதும் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு பருத்தித் துணியால் துடைத்து எடுங்கள். அவை காய்ந்ததும் பெருட்களை உள்ளே வைத்து ஆன் செய்து விடுங்கள்.

பொருட்களை ஃபிரிட்ஜ்ஜில் வைக்கும்போது அறையின் வெப்ப நிலையில் வையுங்கள்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *