Information

பூமியின் வரைபடம் பிழையானது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

உலகின் பெரும்பாலான வரைபடங்கள் முற்றிலும் சரியாக உருவாக்கப்படவில்லை.

ஏனெனில் ஒரு தட்டையான மேற்பரப்பில் பூமியை பிரதிநிதித்துவப்படுத்துவது கடினமான காரியம்.

மெர்கேட்டர் ப்ரொஜெக்ஷன் எனப்படும் மிகவும் பொதுவான வரைபடம் நிலப்பரப்பின் அளவையும் வடிவத்தையும் மாற்றி காட்டுகிறது.

துருவங்களுக்கு அருகிலுள்ள நாடுகளை அவை உண்மையான அளவிலும் பார்க்க மிகைப்படுத்தி பெரியதாகக் காட்டுகின்றன.

கோள வடிவ பூமியை ​​​​ஒரு தட்டையான மேற்பரப்பில் குறிப்பது என்பது நிச்சயம் சவாலான காரியம் தான்.

உதாரணமாக கிரீன்லாந்து இந்த வரைபடத்தில் ஆப்பிரிக்காவை விட பெரியதாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் ஆப்பிரிக்கா கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரியதாகும்.

ஆனால் இந்த விலகல் மூலம் நாடுகளுக்கு இடையே உள்ள அளவுகள், தூரம் பற்றி இவ் வரைபடம் தவறான எண்ணத்தை மக்களுக்கு அளிக்கிறது.

மிகவும் துல்லியமான வரைபடங்களை உருவாக்க கார்ட்டோகிராஃபர்கள் வெவ்வேறு கணிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். இவர்களால் “Peters projection”, “Winkel Tripel projection” போன்ற வரைபடங்கள் உருவாக்கப்படுகிறது.

இந்த வரைபடங்கள் உலகின் மிகவும் யதார்த்தமான பார்வையைக் காட்டுகின்றன.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *