Information

பூனை ஒரு தெய்வமா?

ஆமாங்க நீங்க மேல படிச்சது உண்மைதான். ஆரம்பத்துல அதாவது கி.மு 3100ல பண்டைய எகிப்துல வாழ்ந்த மக்கள் பூனைகள தெய்வமா மதிச்சு வழிபட்டு இருக்காங்க. இது மட்டும் என் பூனை குட்டிக்கு தெரிஞ்சுது திமிர்ல திரிவான் கள்ளப்பயல். அவங்களோட பிரமிட்டுக்கு பக்கத்துல இருக்க உருவம் பூனைய தான் குறிக்குதாம்.

பூனைகள் ஒரு கோடி வருடங்களுக்கு முன்னம் தோன்றியிருந்தாலும் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதானாம் நாங்க வளர்க்க தொடங்கினமாம். முதல் முதலில் பூனைகளை வளர்க்க ஆரம்பித்தது ஆப்பிரிக்கர்களாம். ஏன்அவங்க ளக்க ஆரம்பிச்சினம் எண்ணா எலித் தொல்லய அவர்களால தாங்கவே முடியலையாம்.

பூனையோட மீசை இருக்குல்ல அதனாலதான் பூனைக்கு மிகப்பெரிய வழிநடத்துதலே நடக்குதாம். ஏன்னா இரவில பூனைக்கு வழி காட்டுறதும் பொருள்களுக்கு இடையிலான தூரத்த அறிய உதவுறதும் இந்த மீசை தானாம்.

பொதுவா பூனைகள் இனிப்பான சாப்பாடுகள விரும்ப மாட்டினமாம். ஏன்னா மனிதர்களை விட பூனைகளோட நாக்குல சுவையரும்புகள் குறைவாக தானாம் இருக்குதாம். அதனால இனிப்பு சுவைய அவர்களால் உணர முடியாதாம். இத நான் ஒத்துக்கவே மாட்டேன். என் பூனை பையன் பிஸ்கட் சாக்லட்லாம் சாப்பிடுவான்.

38ஊCல இருக்க உணவுகள தான் பூனைகள் விரும்பி உண்ணுமாம். ஏன்னா குளிரான உணவுகள்ல கிருமிகள் இருக்கும்னு அது நம்புதாம்.

2018 ஆம் ஆண்டு ஆய்வுகளின் படி பூனை ஒன்றின் ஆயுள் காலம் 15.1 ஆண்டாம். ஆனா சில பூனைகள் 30 வருஷம் வரை கூட வாழுமாம். கிரீன் பப் என்ற பூனை அதோட 38 வயசு வரை வாழ்ந்திச்சாம்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *