Information

பாலைவனத்தில் பனிப்பொழிவு

வெப்பமான பாலைவனங்களில் பனிப்பொழிவு நடந்தது என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? பிப்ரவரி 18, 1979 அன்று, இப்படி பட்ட ஒரு அசாதாரண நிகழ்வு நடந்தது. சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு இடம்பெற்றது.

ஆம், நீங்கள் கேட்டது சரிதான். சுமார் 30 நிமிடங்களுக்கு, சஹாராவின் மணல் குன்றுகள் பனியால் மூடப்பட்டிருந்தன. இந்த அரிய நிகழ்வு மக்களை திகைக்க வைத்தது. ஏனெனில் சஹாரா பாலைவனம் பற்றி எம்மில் பலர் அறிந்திருப்போம். சஹாரா பூமியின் வெப்பமான இடங்களில் ஒன்றாகும்.

இப் பாலைவனத்தின் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் காரணமாக அன்றைய பனிப்பொழிவு விரைவாகக் கரைத்துவிட்டது. இதனால் அங்கே பனி நீண்ட காலம் நீடிக்கவில்லை.

இருப்பினும், இயற்கையானது எவ்வளவு எதிர்பாராத மற்றும் ஆச்சரியமானதாக இருக்கும் என்பதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க நினைவூட்டலாகும். பொதுவாக வெப்பமான மற்றும் வறண்ட பாலைவனத்தை ஒரு தற்காலிக குளிர்கால அதிசய பூமியாக மாற்றும் திறமை இயற்கை ஒன்றிற்கே உள்ளது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *