Information

பாம்பு, சிலந்தியில் இருந்து பீர்! உலகில் மக்கள் விரும்பும் விசித்திர பானங்கள்

உலகின் 5 வகையான விசித்திரமான பானங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தொப்புள் பீர்

தொப்புள் குழியில்  இருந்து வரும் கழிவுகளை கலந்து பீர் தயாரிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் செவன் சென்ட் ப்ரூவரி நிறுவனம் இந்த பீர் மதுபானத்தை தயாரிக்கிறது.

பாம்பு ஒயின்

பாம்பு ஒயின் பொதுவான திராட்சை விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் ஒரு பாட்டிலில் விஷப் பாம்பையும் காணலாம். இந்த மதுவில் பாம்புகள் வைக்கப்பட்டு நொதித்த பிறகு குடிக்கப்படுகிறது.

ஜப்பானிய தீவான ஒகினாவாவிலும், சீனாவிலும் பாம்பு விஸ்கி தயாரிக்கப்படுகிறது. டெட் பிட் வைப்பர் வகை பாம்புகள் மது பாட்டில்களில் வைக்கப்பட்டு பின்னர் மதுவை நிரப்பி மாதக்கணக்கில் பதப்படுத்தப்படும்.

இந்த மதுபானம் சீனா மற்றும் வியட்நாமிலும் அதிகம் அருந்தப்படுகிறது.

குழந்தைகள் பீர்

இந்த பீர் ஜப்பானில் தயாரிக்கப்படுகின்றது. மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அது மது அல்ல. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த பீரின் அமைப்பு, தோற்றம், அதில் வளரும் நுரை என அனைத்தும் நிஜ பீர் போல் தெரிகிறது. இதை குழந்தைகள் குடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரகோக்

அரகோக் எனப்படும் சிறப்பு வகை காக்டெய்ல் மெக்சிகோவில் உள்ளது.  இது சிலந்தி விஷம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதனை குடிப்பதால் நாக்கு மரத்துப்போகும் என்று ஒடிடிடி சென்ட்ரல் நியூஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எறும்பு ஜின்

ஆஸ்திரேலியாவில் இந்த மதுபானம் எறும்புகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.. பழங்காலத்தில் ஆஸ்திரேலிய மக்கள் இதை மருத்துவ ரீதியாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *