Information

பன்றிகளுக்கு தலையின் பக்கத்திலேயே கண்கள் இருக்கும்! ஏன் தெரியுமா?

பன்றிகளின் கழுத்தில் இருக்கும் தனித்துவமான எலும்பு மற்ற விலங்குகளில் இருந்து அவற்றை வேறுப்படுத்தி காட்டுகின்றது.

அவை மேலே அண்ணார்ந்து உயரத்தை பார்ப்பது என்பது சவாலான விடயம். பன்றிகளின் கழுத்து எலும்புகள் குறுகியதுடன் உடல் தலையை பின்னால் சாய்க்கும் திறனைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இதன் பொருள் பன்றிகள் வானத்தைப் பார்க்கும் போது குறைந்த அளவிலேயே அண்ணார்ந்து பார்க்க முடிகிறது. பெரும்பாலும் பன்றிகளுக்கு தலையின் பக்கத்திலேயே கண்கள் உள்ளது.

இது வேட்டையாடுபவர்களைக் கவனிக்க பரந்த பார்வையை இவற்றிற்கு கொடுக்கிறது.

இருந்தாலும் இந்த நிலைப்பாடு முழு உடலையும் திருப்பாமல் நேரடியாக மேலே பார்ப்பதை கடினமாக்குகிறது. பன்றிகளின் கழுத்து அமைப்பு, கண் அமைவிடம் காரணமாக இவற்றால் வானத்தை எளிதாகப் பார்ப்பது சவாலாக உள்ளது.

மாறாக, பன்றிகள் தரை மட்டத்தில் அல்லது கண் மட்டத்திற்கு சற்று மேலே என்ன நடக்கிறது என்பதை தெளிவாக அறிய கூடியதாக உள்ளது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *