Information

பஞ்சு மிட்டாய் சாப்பிட்டால் கேன்சர் வருமா? எச்சரிக்கை மக்களே

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து சாப்பிடும் பஞ்சுமிட்டாய்யில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமிகள் உள்ளதாம்.

பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரோடமைன் பி-பி என்னும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுகின்றது.

பஞ்சுமிட்டாயில் சேர்க்கப்படும் ரோடமைன் பி

ரோடமைன் பி- செயற்கை நிறமூட்டியைக் கொண்டது.  இது பளிச் என்ற சிவப்பு நிறத்தை கொடுக்கும். இது நிரில் எளிதில் கலக்க கூடிய தன்மை கொண்டது. குறைந்த செலவு கொண்டது. இவை மக்கும் தன்மை அற்றவை என்பதோடு வெப்பம், வெளிச்சம் ஆகியவற்றையும் தாங்க கூடியவை என்பதால் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

காரத்தன்மை கொண்ட இது தொழிற்சாலைகளில் பயன்படுத்தகூடியது.

குறைந்த செலவில் உற்பத்தி செய்யகூடிய இது காகிதம், ஜவுளி, தோல் துறை போன்றவற்றில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது.

செயற்கை நிறம் கொடுக்கும் பொருள்கள் உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என்றாலும் எந்த பொருள்களை பயன்படுத்தாலும் எவ்வளவு வரை பயன்படுத்தலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயித்துள்ளது. அப்படியான வழிகாட்டுதலில் இந்த ரோடமைன் பி உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்பதால் இதை தடை செய்யப்பட்டுள்ளது.

ரோடமைன் பி உடல் ஆரோக்கியத்தில் உண்டு செய்யும் மாற்றங்கள்

ரோடமைன் பி நீண்ட கால நுகர்வு கல்லீரல் பாதிப்பு, கட்டிகள் மற்றும் புற்றுநோய் உண்டு செய்யும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

ரோடமைன் பி நிறம் கலப்படத்தை எப்படி அறிவது?

உணவு பொருள்களில் இருந்தால் ஈரமான பஞ்சை நனைத்து உணவின் மீது வைக்கும் போது அதில் நிறம் படியகூடும். அதே போன்று சிறிது நீரில் போட்டு சில நிமிடங்கள் கழித்து பார்த்தால் நிறம் தனியாக தெரியும்.

எண்ணெய் கொண்டு பஞ்சை தடவி எடுத்தாலும் அந்த நிறம் அதில் ஒட்டும். இவற்றில் நிறம் கலக்காமல் இருந்தால் அதில் நிறம் ஒட்டாது.

பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி சேர்க்காமல் வெள்ளை நிறத்தில் தயாரித்து கொடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *