Information

நாய்கள் ஏன் அடிக்கடி செருப்பை கடிக்கிறது தெரியுமா?

இயற்கையாக நட்புடன் பழகும் குணத்தை கொண்ட நாய்கள் செய்யும் சில விஷயங்களுக்கு பின்னாடி இருக்கும் காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.

சில நாய்கள் பொதுவாக இரவு நேரத்தில் கார், பைக்கை வேகமாக துரத்தும்.

மேலும் செருப்புகளை பார்த்தாலே கடிக்கும்.

ஆனால் நாய்களின் இந்த செயல்களுக்கு பின்னால் ஏதோ காரணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

நாய்கள் மனிதனின் காலணிகளை கடிப்பதற்கும், ட்ரஸை கடித்து கிழிப்பதற்கு காரணம் அது அந்த நபரை நேசிப்பதாக அர்த்தம்.

அவர்களின் நறுமணம் பிடித்ததால் அதை தக்க வைத்து கொள்ள இது போன்ற செயல்களின் ஈடுபடும்.

நாய்கள் ஒருவரை பிரிந்தால் வேதனையில் வாடும். இதனால் அவர்களின் பிரிவை சரி செய்வதற்காக இது போன்ற செயல்களின் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

ஆனால் அது எப்போதும் பொருந்தாது. பல சமயங்களில் கடுமையான பசியின் காரணமாகவும் நாய்கள் காலணிகளை மெல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது.

நாய்கள் வயிற்றில் புழுக்கள் இருந்தாலும், அவை இந்த பழக்கத்திற்கு ஆளாவதாக தெரிகிறது. குறிப்பாக நாய் குட்டிகள் இது போன்று செயல்களில் ஈடுபடுவதற்கு காரணம் அது விளையாடுவதாகவும் இருக்கலாம்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *