Information

நாய்களுக்குள் திசைகாட்டி… நம்ப முடிகின்றதா?

நீங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை குளிப்பாட்டும் போது அது வடக்கு-தெற்கு பக்கம் நோக்கி இருப்பதை அவதானித்துள்ளீர்களா? இவை இவ் அச்சு நோக்கி தம்மை திருப்பி கொள்ளும் ஒரு ஆச்சரியமான நிகழ்வை பலர் அவதானித்துள்ளனர்.

இந்த நடத்தை பெரும்பாலும் நாய்களில் “magnetic sense” அதாவது காந்த உணர்வின் காரணமாக ஏற்படுகின்றது. பூமியின் காந்தப்புலத்தை உணரும் திறன் நாய்களின் உளவியல் திறனுடன் தொடர்புடையதாக உள்ளது.  நாய்களின் மூளைக்குள் இயற்கையாகவே காந்த திசைகாட்டி இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதனால் நாய்கள் பூமியின் காந்தப்புலத்தின் படி தங்களைக் திசைதிருப்பி கொள்கின்றன. திறந்த வெளியில் இருக்கும்போதோ அல்லது நாய்கள் சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது மலம் கழிக்கும் போதா அவை வடக்கு-தெற்கு அச்சில் நின்று தான் இவற்றை மேற் கொள்கின்றன.

சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் நாய்கள், பூமியின் காந்தப்புலத்தை ஒரு வகையான “internal GPS” ஆகப் பயன்படுத்தி வீட்டிற்குத் திரும்புவதற்கான வழியைக் கண்டறியவோ அல்லது அவை வாழும் பிரதேசத்தை கண்டறியவோ பயன்படுத்துகின்றன என கூறுகிறார்கள்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *