Information

திடீரென வீட்டுக்குள் பாம்பு நுழைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்!

திடீரென வீட்டுக்குள் பாம்பைக் கண்டுவிட்டால், பயத்தில் ஓட எத்தனிப்போம்.

ஆனால், உண்மையில் பாம்பைக் கண்டுவிட்டால் என்ன செய்யவேண்டும் இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

பாம்பு இருக்கும் திசையில் எந்தவொரு அசைவையும் கொடுக்காமல் இருக்க வேண்டும். பாம்பு இருக்கும் திசையில் ஓட முயற்சிக்கக் கூடாது. பாம்பை அடிக்க முயற்சிக்கக்கூடாது.

பொதுவாக பாம்புகள் மனிதர்களின் அருகில் வர விரும்புவதில்லை. மாறாக மனிதர்கள் அவைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தால் அது அவற்றின் வழியைப் பின்பற்றி வெளியேறும்.

தனக்கு ஆபத்து ஏற்படப்போகிறது என்பதை உணரும்போது அல்லது தாக்கப்படும்போது மட்டுமே எதிர்த்து தாக்க முயற்சிக்கும்.

இன்னொரு விடயத்தையும் நாம் பின்பற்ற வேண்டும். பாம்பு இருக்கும் இடத்தில் அமைதியைப் பேண வேண்டும். அதனை திடுக்கிடவோ அல்லது பயமுறுத்தவோ கூடாது.

முன்பின் பாம்புகளைப் பிடித்து பழக்கமில்லாதவர்கள் அந்த செயலில் ஈடுபடக்கூடாது. பாம்புகளைக் கையாள்வதில் அனுபவம் உள்ளவர்களின் உதவியை நாட வேண்டும்.

பாம்புகளுக்கு காதுகள் இல்லை என்றாலும் அவற்றால் அதிர்வுகளை உணர முடியும். எனவே அதிகமான சத்தம் அவற்றை அமைதியான இடத்துக்கு ஓடச் செய்யும். எனினும் இவ்வாறு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.

 

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *