Information

டை அணிவதில் இவ்ளோ ஆபத்தா?

டை அணிவதனால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை 7.5% இனால் குறைக்க முடியும் என ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையிலுள்ள ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டைன் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்படுகிறது.

இறுக்கமான கழுத்து டை அணிவது உடலின் உள்ளே அழுத்தத்தை அதிகரிப்பதுடன் பெருமூளைக்கான இரத்த ஓட்டத்தை குறைக்கின்றது என இவ் ஆய்வு தெரிவிக்கிறது. டையின் அழுத்தத்தால் கழுத்தில் உள்ள இரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்படுவதன் காரணமாக இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

ஒரு டை இறுக்கமாக அணியும் போது அது மூளைக்கு இரத்தத்தை எடுத்து செல்வதும் மூளையிலிருந்து இரத்தத்தை மீண்டும் வெளியேறுவதற்கும் முக்கியமான கழுத்து நரம்பு கரோடிட் தமனிகளை அழுத்துகின்றன. இந்த சுருக்கம் மூளைக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தின் ஓட்டத்தைத் தடுக்கிறது.

இதன் விளைவாக அறிவாற்றல் செயல்பாடு, மூளை செயல்திறன் என்பன பாதிக்கப்படலாம். இரத்த ஓட்டத்தில் 7.5% குறைப்பு ஒப்பீட்டளவில் பார்க்கும் போது சிறியதாகத் தோன்றினாலும் பெருமூளையில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டு அறிவாற்றல் திறன்களும் மூளை ஆரோக்கியமும் குறைகிறது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *