Information

கோழிகளுக்கு கனவுகள் வருமாம்!

பெரும்பாலானவங்க வீட்ல வளர்க்கப்படுற ஒரு பறவை தான் கோழி.

கோழிகளுக்கு மனிதனை விட கூடிய அளவு கண் பார்வை தெரியும்னா உங்களால நம்ப முடியுமா?

உண்மைதாங்க. உங்கள விட கோழிகளுக்கு நல்லாவே கண் தெரியும்.

உங்களுக்கு எப்படி கனவு வருதோ அதே போல கோழிகளுக்கும் கனவுகள் வருமாம். என்னோட கனவுல கோழி வர்ற மாதிரி கோழியோட கனவுல நான் போவேனா?

கோழிகள் தூங்கும் போது ஒரு கண்ண திறந்தபடியும் மற்றைய கண்ணை மூடிய படியும் தான் தூங்குமாம். ஏனென்றால் தூங்கும் போது தனக்கு ஆபத்து ஏற்பட்டா முழித்துக் கொள்வதற்காக இந்த ட்ரிக்க பாவிக்குதாம்.

கோழி ரொம்ப வேகமாகவே ஓடுமாம். கோழி வளக்குறவங்களுக்கு தெரியும் ஒரு கோழிய பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு. உலகத்துல கிட்டத்தட்ட 25 மில்லியன் கோழிகள் இருக்கிறதா சொல்றாங்க.

இதுல 50 சதவீதமானவை பண்ணைகள்ல வளர்க்கப்படுவதாகவும் மீதி இருக்கிற கோழிகள் இறைச்சிக்காக பயன்படுத்தப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.

அதேபோல கோழிகள் புத்திசாலியானவை. தாய்க்கோழிகள் குஞ்சு கோழிக்கு எப்படி உணவு உண்ணனும் எப்படி உணவை தேடணும் தேடின உணவு எங்க சேமிச்சு வைக்கணும் என்ற வரைக்கும் சொல்லிக் கொடுக்குமாம்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *