Information

காற்றாலைகளால் பறவைகளுக்கு ஆபத்தா?

காற்றாலையிலுள்ள விசிறிகளால் மின்சாரம் உருவாக்கும் ஆற்றல் தற்போது பிரபலமான ஒரு முறையாகும்.

இது பச்சை வீட்டு வாயுக்களின் அகத்துறிஞ்சலை குறைப்பதாகவும் தேவையானளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாகவும் உள்ளது.

இருப்பினும் இவற்றால் பறவை இனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. காற்றாலையின் கத்தி போன்ற விசிறிகள் அதிக வேகத்தில் சுழல்வதால் அவற்றின் அருகில் பறக்கும் பறவைகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

பறவைகள் கத்திகளுடன் மோதுவதால் அவற்றிற்கு காயங்கள் ஏற்படுவதுடன் பறவைகளின் இறப்புகளுக்கும் வழிவகுக்கிறது.

இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 10,000 முதல் 100,000 பறவைகள் காற்றாலை விசிறிகளுடன் மோதுவதால் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காற்றாலைகளின் இருப்பிடம், பறவைகளின் இடம்பெயர்வு முறைகள் மற்றும் விசிறிகளின் வடிவமைப்பு போன்ற காரணிகளைப் பொறுத்து பறவை உண்மையான இறப்பு எண்ணிக்கை மாறுபடுகிறது.

ராப்டர்கள், வெளவால்கள் போன்ற சில வகையான பறவைகள் அவற்றின் பறக்கும் முறைகள் காரணமாக காற்றாலை விசிறிகளுடன் மோதுவதால் அதிகமாக பாதிக்கப்படுகிறது.

பறவைகளின் தொகையில் காற்றாலை விசிறிகளினால் ஏற்படும் இழப்புக்களை தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் காற்றாலைகளை அமைப்பதற்கு முன், சுற்றுச்சூழலை மதிப்பீடு செய்தல், அதை கண்காணிப்பு செய்தல், பறவைகளின் மோதல்களைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்களை ஆராய்தல் ஆகிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *