Information

கண்ணில் இவ்வளவு விசயம் உள்ளதா?

கடவுளின் அற்புதமான படைப்புக்களில் மனிதனின் கண் சிறப்பானது.

துல்லியமாக சொல்வதென்றால் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான வெவ்வேறு வண்ணங்களைக் எமது கண்களால் பார்க்கலாம்.

இது எப்படி சாத்தியமாகிறது என எப்போதாவது யோசித்துள்ளீர்களா? நம் கண்களுக்கு நிறத்தைக் காண உதவும் கூம்புகள் எனப்படும் சிறப்பு நிறப்பொருட்கள் கண்ணில் உள்ளன.

இந்த கூம்புகள் மூன்று நிறங்களுக்கு தனித்துவமானவை. சிவப்பு, பச்சை மற்றும் நீலம். என்பனவே அவ் நிறங்கள் ஆகும்.

ஒளி நம் கண்களுக்குள் நுழையும் போது ​இந்த கூம்புகள் நமது மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புகின்றன. பின்னர் அவை சமிக்ஞைகளை வெவ்வேறு வண்ணங்களாக பிரித்தறிகின்றன.

ஒவ்வொரு கூம்பு வகையும் வெவ்வேறு அளவிலான வண்ணங்களுக்கு உணர்திறன் கொண்டது. சிவப்பு கூம்புகள் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களுக்கும், பச்சை கூம்புகள் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களுக்கும், நீல நிற கூம்புகள் நீலம் மற்றும் ஊதா நிறங்களுக்கும் உணர்திறன் கொண்டவை.

இந்த கூம்புகள் ஒன்றாக வேலை செய்யும் போது, ​​அவை பலவிதமான வண்ணங்களைப் பார்க்க அனுமதிக்கின்றன.

இந்த மூன்று வகையான கூம்புகளின் சமிக்ஞைகளை இணைப்பதன் மூலம், நமது மூளை பத்து மில்லியன் கணக்கான வெவ்வேறு நிறங்கள் மற்றும் சாயல்களை வேறுபடுத்தி அறிகிறது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *