Information

ஒத்த இரட்டையர்களும் அவர்களின் கைரேகைகளும்

ஒத்த இரட்டையர்கள் ஒரு முட்டை இரண்டாக பிரிந்து கருக்கட்டப்படும் போது பிறக்கின்றனர்.

இதனால் அவர்கள் ஒரே DNAவைப் பகிர்ந்து கொள்கின்றனர்.  இதனால் அவர்கள் உருவத்திலும் முகசாயலிலும் ஒரே மாதிரியாக இருக்கின்றனர்.

இருப்பினும் அவர்களது கைரேகைகள் DNA மூலமும் கரு வளரும் சூழலினாலும் தீர்மானிக்கப்படுகிறது.

ஒரே மாதிரியான இரட்டையர்கள் கருப்பையில் வளரும் போது அவர்கள் கருப்பையின் வெவ்வேறு பகுதிகளில் வளர வாய்ப்புண்டு. இதனால் அவர்களின் தோலில் தனித்தன்மை வாய்ந்த கலங்கள் மற்றும் வேறு சில பிறப்புரிமை காரணிகளால் அவர்களின் கைரேகைகளை வேறுபட்டவையாக உருவாகின்றது.

ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒரே மரபணுக் குறியீட்டைப் பகிர்ந்து கொண்டாலும் கூட அவர்களின் கைரேகைகள் சுயாதீனமாக உருவாகின்றன.

அதாவது அவர்களின் கைரேகைகள் ஒரே மாதிரியாக இருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் அவை ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

அவர்களின் விரல்களில் உள்ள முகடுகள் மற்றும் விரல்களின் வடிவம் வளர்ச்சியின் போது பல காரணிகளால் பாதிக்கப்படுகின்றன.

இது அவர்களின் கைரேகைகளில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஒத்த இரட்டையர்கள் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் அவர்களின் கைரேகைகள் ஒருவரையொருவர் வேறுபடுத்திக் காட்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *