Information

ஏசி எவ்வளவு நேரம் ஓடினாலும் கரண்ட் பில் குறைவாக வரணுமா..?

ஏர் கண்டிஷனரை திறம்பட பயன்படுத்துவதன் மூலமாக எலெக்ட்ரிசிட்டி பில்லை எப்படி சேமிப்பது என்பது சம்பந்தப்பட்ட ஒரு சில குறிப்புகளை பார்க்கலாம்.

ஏசியை 24 டிகிரி செல்சியஸுக்கு அமைப்பது மிகவும் சௌகரியமானது மற்றும் மனித உடலுக்கு ஏற்ற வெப்பநிலையாக அமையும்.

உங்களுடைய ஏசியில் நீங்கள் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை குறைக்கும் பொழுதும் மின்சார பயன்பாடு 6 சதவீதம் அதிகமாகும்.

எனவே உங்களது ஏசியை 20 முதல் 24 டிகிரிகள் வரை வைத்து  ஏசி அதிகப்படியாக வேலை செய்வதை தவிர்த்து, உங்கள் மின்சார கட்டணத்தை குறையுங்கள்.

உங்களிடம் விண்டோ ஏசி அல்லது ஸ்பிலிட் ஏசி எது இருந்தாலும் கண்டன்சர் யூனிட் வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும்.

வீட்டிற்குள் இருக்கக்கூடிய யூனிட்டிலும் தூசுகள் ஃபில்டர்களில் நுழைவதற்கு வாய்ப்புள்ளது.

இதனால் ஃபில்டர்களில் அடைப்பு ஏற்பட்டு ஏசி வழக்கத்தைவிட அதிகமாக வேலை செய்து அறையை குளுமைப்படுத்துவதற்கு முயற்சி செய்யும்.

இதனால் மின்சார கட்டணம் அதிகரிக்கும். ஆகவே பணத்தை சேமிப்பதற்கு உங்களுடைய ஏசி ஃபில்டர்களை சீரான இடைவெளியில் சுத்தம் செய்வதை உறுதிப்படுத்துங்கள். பொதுவான சர்வீஸ் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ செய்யலாம். அதே நேரத்தில் தூசு மற்றும் மாசுக்களில் இருந்து ஃபில்டர்களை மாதம் ஒரு முறை சுத்தம் செய்யுங்கள்.

உங்களுடைய சௌகரியம் மற்றும் உங்களுடைய பணம் ஆகிய இரண்டுக்குமே ஏசியின் டைமர் செயல்பாட்டை பயன்படுத்துவது உதவும். நீங்கள் தூங்குவதற்கு முன்பு ஏசியின் டைமரை ஆன் செய்துவிட்டு அது ஆட்டோமேட்டிக்காக 1 அல்லது 2 மணி நேரத்திற்கு பிறகு ஆஃப் ஆவதை நீங்கள் உறுதி செய்யலாம்.

இவ்வாறு நீங்கள் செய்யும்பொழுது இரவு நேரத்தில் மின்சார பயன்பாடு குறையும். அதே நேரத்தில் நீங்கள் தூக்கத்தின் நடுவே எழுந்து ரிமோட்டை எடுத்து ஆஃப் செய்ய வேண்டிய கட்டாயத்தை தவிர்க்க உதவுகிறது.

அதே போல டைமரை நீங்கள் ஆன் செய்யும்பொழுது ஏசி தொடர்ந்து வேலை பார்த்து வந்ததால் அதற்கும் ஒரு பிரேக் கொடுப்பது போல அமையும்.

 

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *