InformationTrending

உயிருள்ள தோலைப் பயன்படுத்தி ஸ்மைலி ரொபோக்களை உருவாக்கிய விஞ்ஞானிகள்! தொழில்நுட்பத்தின் உச்சம்

ஜப்பானிய விஞ்ஞானிகள் உயிருள்ள மனித தோல் செல்களில் இருந்து புன்னகைக்கும் ரோபோ முகத்தை உருவாக்கி சாதனைப்படைத்துள்ளனர்.

மனித தோல் செல்களைப் பயன்படுத்தி, ஓர் ஹ்யூமனாய்ட் ரோபோவுக்கு இயற்கையான புன்னகையை வழங்கும் முகத்தை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மனித தோல் எவ்வாறு உடலுடன் இயற்கையாக இணைக்கப்படுகிறதோ அதையே இங்கு பின்பற்றியுள்ளனர்.

தோல் தசைகளைப் போன்ற ஒரு கட்டமைப்பை கொலாஜென் மூலம் உருவாக்கி, அதன் மீது உயிரோடு இயங்கும் தோல் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் முகத்தின் தசை அசைவுகளைப் போன்றே தோலும் அசைந்து இயற்கையான புன்னகையை தோற்றுவிக்கிறது.

இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மனிதர்கள் மற்றும் ரோபோக்களின் உறவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும்.

மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ரோபோக்கள், மருத்துவம் மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *