Information

உங்கள் ஸ்மார்ட் போன் ஜட் வேகத்தில் இயங்கணுமா? இதோ சூப்பர் ஐடியா

காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும்வரை வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே ஸ்மார்ட் போன் மாறிவிட்டது.

ஸ்மார்ட் போனின் தொடர் பாவனையால் நாளாக நாளாக ஸ்லோவாகலாம்.

இவ்வாறு ஸ்லோவாகும்போது, அது பல பிரச்சினைகளுக்கு வித்திடும். எனவே, அவற்றை எவ்வாறு சரி செய்யலாம் எனப் பார்ப்போம்.

உங்கள் ஸ்மார்ட் போன் ஸ்லோவாக ஆரம்பித்தால் முதலில் அதனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது சின்னச் சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் உடனே சரியாகிவிடும்.

அடுத்ததாக உங்கள் ஸ்மார்ட் போன் பழைய அப்டேட்டில் இருந்தால் உடனே அதனை புது அப்டேட்டுக்கு மாற்றுங்கள். ஏனென்றால் பழைய அப்டேட்டில் இருக்கும்போது ஸ்மார்ட் போன் ஸ்லோவாக ஆரம்பிக்கும்.

அதுமட்டுமின்றி பழைய அப்டேட்டில் இருக்கும்பொழுது ஸ்மார்ட் போன் மால்வேர் அட்டாக் ஆகவும் வாய்ப்பிருக்கிறது.

மேலும் தொலைபேசியில் ஸ்டோரேஜ் புல்லாக இருந்தாலும் ஸ்லோவாகும். அதனால் தேவையற்ற ஃபைல்களை எல்லாம் அழித்து 40-50 சதவீதம் எப்பவும் ஃபோன் ஸ்டோரேஜ் காலியாக இருக்க வேண்டும். அதனால் உபயோகிக்காத ஆப்கள் அனைத்தையும் அழிப்பது சிறந்தது.

தெரியாத ஆப்ஸ், வைஃபை எதையும் உபயோகிக்க வேண்டாம்.

இவை எல்லாவற்றையும் செய்தும் ஃபோன் ஸ்லோவாக இருந்தால், அனைத்து பைல்களையும் பேக் அப் எடுத்துக்கொண்டு ஃபோனை ஃபேக்டரி ரீ ஸ்டார்ட் பண்ணவும்.

இனி உங்க ஸ்மார்ட் போன்சூப்பர் ஃபாஸ்ட்டா வேலை செய்யும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *