Information

உங்கள் ஸ்மார்ட்போன்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் யாரோ ஒட்டுகேக்குறாங்கனு அர்த்தமாம்? உஷார்

காலையில் கண் விழிப்பது முதல் இரவு உறங்கும் வரை எம்முடைய அனைத்து தேவைகளுக்கும் ஸ்மார்ட் போன்கள் உறுதுணையாக உள்ளது.

வளர்ந்து வரும் தொழிநுட்பம் காரணமாக மொபைலில் உள்ள இரகசியங்கள் திருடப்படுகின்றது.

இந்த பதிவில், ஹேக்கர்கள் உங்கள் போனை அணுகுவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும் உங்கள் தொலைபேசியின் பேட்டரியை அடிக்கடி சார்ஜ் செய்யும் நிலை ஏற்பட்டால்  உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதற்கான முக்கிய அறிகுறியாகும்.

ஆட் பிளாக்கரைப் பயன்படுத்தினாலும், உங்கள் மொபைலில் தொடர்ந்து விசித்திரமான பாப்-அப்கள் வருவது அடுத்த  அறிகுறியாகும். இது உங்கள் தொலைபேசி ஆபத்தில் இருப்பதைக் குறிக்கிறது, இது உங்கள் தகவல் திருடப்படுவதற்கான அறிகுறியாகும். இந்த பாப்-அப் ஃபிஷிங் என்று அழைக்கப்படுகிறது.

உங்கள் ஃபோன் திடீரென்று மெதுவாக வேலை செய்தாலோ அல்லது அடிக்கடி ஆஃப் ஆனாலோ உங்கள் போன் நுழைவு தகவல்களை யாரவது திருடக்கூடும்.

உங்கள் ஃபோன் பயன்படுத்தும் டேட்டாவின் அளவு திடீரென அதிகரித்தல்.

ஹேக்கர்கள் உங்கள் மொபைலை ஹேக் செய்திருந்தால், அவர்கள் நேரடியாக உங்கள் போனில் உள்ள நம்பர்களுக்கு செய்திகள் அல்லது அழைப்புகளை அனுப்பலாம்.

உங்கள் கணக்குகளில் ஏதேனும் விசித்திரமான செயல்பாட்டைக் கண்டால், நீங்கள் தீவிரமான சிக்கலை எதிர்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கேலரியில் அறிமுகமில்லாத புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைக் கண்டறிவது அல்லது உங்கள் ஃபோனின் ஃபிளாஷ் தானாகவே இயங்குவது உங்கள் கேமராவின் ரிமோட் கண்ட்ரோலைக் குறிக்கலாம்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *