Health

ஹெட்போன்களில் இவ்வளவு ஆபத்தா? உஷார் மக்களே…!

பாக்டீரியாக்கள் மிகச்சிறிய நுண்ணுயிரிகளாகும். அவை அதிகமாகப் பெருகினால் நோய்கள் அதிகமாக ஏற்படும். ஹெட்ஃபோன்களை அணியும் போது பாக்டீரியாக்கள் உங்கள் காதுகளில் நிலவும் வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் பாவித்து விரைவாக வளருகின்றன.

ஒருவர் ஹெட்ஃபோன்களை அணிந்து ஒரு மணி நேரத்திற்குப் பின்பு அவர் காதுகளில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை முதலில் இருந்ததை விட 700 மடங்கு அதிகரிக்கும். இதன் பொருள் இதற்கு முன் பாதிப்பில்லாததாக இருந்த ஒரு சிறிய அளவு பாக்டீரியாக்கள் விரைவாகப் பெருகி எண்ணிக்கையில் அதிகரிக்கலாம்.

பாக்டீரியாவின் அதிகரிப்பு காது தொற்று அல்லது காது தொடர்பான பிற பிரச்சனைகளை நம்மில் ஏற்படுத்தும். இது நிகழாமல் தடுக்க, உங்கள் ஹெட்ஃபோன்களை தவறாமல் சுத்தம் செய்வதுடன் மற்றவர்களுடன் அதை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் காதுகளினுள் பாக்டீரியா வளர்ச்சியின் அபாயத்தைக் குறைக்க ஹெட்ஃபோன்களை தொடர்ந்து அணிவதை குறைத்து கொள்ளலாம். இந்த எளிய வழிமுறையை மேற்கொள்வதன் மூலம் உங்கள் காதுகளை ஆரோக்கியமாகவும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிலிருந்தும் பாதுகாத்து கொள்ளலாம்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *