Health

ஹீட் ஸ்ட்ரோக் வியாதியா? எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

Heat stroke என்பது தற்போதைய உயர் வெப்பநிலை காரணமாக அயனமண்டல நாடுகளில் வேகமாக ஏற்பட்டுவரும் ஒரு நோய் ஆகும். மனித உடலினால் மேலதிக வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாத சந்தர்பங்களில் இது ஏற்படும்.

உடலில் வியர்வை சுரப்பியின் செயற்பாடு தோல்வியடைவதால் உடலால் குளிர்ச்சியான நிலையை பேண முடியாது போகலாம். இதன் போது உடல் வெப்பநிலை பதினைந்து நிமிடங்களில் 104ஊF எய்தும். இதுவே இந் நேய் நிலமை ஆகும்.

மயக்கம், இதயதுடிப்பு அதிகரித்தல், குமட்டல், கட்டுப்படுத்த முடியாதளவு தலைவலி, குழப்பமான மனநிலை, தலைச்சுற்று, உலர்ந்த அல்லது ஈரமான சிவந்த தோல், உடல் வெப்பநிலை 103ஊF அடைதல் என்பன இதன் அறிகுறிகள் ஆகும்.

இந் நோய் ஏற்பட்டவர் 1-2 நாட்கள் வைத்தியசாலை கண்காணிப்பில் இருக்க வேண்டும். எனினும் முழுமையாக குணமாகி பழைய நிலையை அடைய ஏறத்தாழ இரண்டு மாத காலம் ஆகும்.

இந் நோய் உள்ளவர்களை குளிர்ந்த இடங்களில் வைத்திருக்க வேண்டும்.

அடிக்கடி ஈர துணியால் கழுத்து நெற்றி கை கால் போன்றவற்றை துடைத்து விட வேண்டும். குளிரான நீருக்கடியில் இருத்தி வைத்தல் வேண்டும். எனினும் வைத்தியர் அணுகி சிகிச்சை எடுப்பதே சிறந்தது ஆகும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *