Health

வெங்காய தோலை இனி குப்பையில் போடாதீங்க!  இவ்வளவு நன்மைகள் இருக்கு

வெங்காயத் தோல்களில் நல்ல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. பெரிதும் அறியப்படாத வெங்காய தோலின் சில முக்கிய நன்மைகளை  இன்று பார்க்கலாம்.

  1. வெங்காய தோல்களில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே வெங்காயத் தோல்கள் நல்ல செரிமானத்திற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.
  2. வெங்காய தோலானது ஃபிளாவனாய்ட்கள் குறிப்பாக சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஃபிளாவனாய்ட்டான Quercetin-ஐ கொண்டிருக்கின்றன. இது அழற்சியை குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளை வழங்குகிறது.
  3. வெங்காயத் தோல்களில் உள்ள குவெர்செடின் போன்ற அதிக அளவு ஃபிளாவனாய்ட்ஸ்  அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளை கொண்டிருக்கின்றன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை நடுநிலையாக்க உதவி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்-ஐ குறைக்கின்றன.
  4. மேலும் இதய நோய் மற்றும் கேனர் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.
  5. வெங்காய தோல்களில் காணப்படும் Quercetin உள்ளிட்ட கலவைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.
  6. வெங்காயத் தோலில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஃபிளாவனாய்ட்ஸ் உள்ளிட்ட கலவைகள் காணப்படுகின்றன.
  7. எனவே வெங்காயத்தோலை சாறு எடுத்து பயன்படுத்துவது அல்லது இன்ஃப்யூஷன்ஸை மேற்பூச்சாகப் பயன்படுத்துவது சரும எரிச்சலில் இருந்து நிவாரணம் தரும்.
  8. மேலும் சருமத்தில் ஏற்படும் சிவப்பை குறைக்கவும், காயங்கள் விரைவாக ஆறுவதை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
  9. வெங்காய தோல்களை துணிகள், முட்டைகள் அல்லது முடிக்கு வண்ணம் பூச ஒரு இயற்கையான சாயமாக பயன்படுத்தலாம்.
  10. பொதுவாக வெங்காயத்தின் வெளிப்புற தோல்களில் பிக்மென்ட்ஸ் உள்ளன, இதனை எக்ஸ்ட்ராக்ட் செய்யும் போது மஞ்சள், ஆரஞ்சு, மற்றும் ரெட்டிஷ்-பிரவுன் போன்ற பல்வேறு ஷேட்ஸ்கள் கிடைக்கின்றன. இவை பிரித்தெடுக்கப்பட்டு சாயமாக பயன்படுத்தப்படுகின்றன.
Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *