Health

பெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் சக்தி வாய்ந்த மருத்துவம்

மாதவிடாய்க் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கையே என்றாலும், இன்றைய உலகில் பல பெண்கள் இதகால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

வலி இருக்கும் நேரத்தில் பல பெண்கள் காலை உணவை தவிர்த்து விடுவார்கள்.

வலி இருந்தாலும் அவசியம் சாப்பிட வேண்டும், இட்லி அல்லது கஞ்சி கூட குடிக்கலாம், ஆனால் ஏதேனும் ஒரு உணவு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் உடல் ஜீரண உறுப்புகளுக்கு ஏதும் வேலைகள் இல்லாத போது, ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மாதவிலக்கு நேரத்தில் வலிகள் ஏற்படக் காரணமாகிறது.

அதிக வலி இருக்கும் பெண்கள் கடுக்காயை பயன்படுத்தலாம்.

கடுக்காய் எனப்படுவது காய்ந்து சற்று சுருங்கிய தோலுடன் காணப்படும், கடைகளிலும் காயாகவும் கிடைக்கும், இந்தக் கடுக்காய்களை வாங்கிக் கொள்ளவும். இவற்றிலிருந்து கொட்டையை நீக்க வேண்டும், கடுக்காய்க் கொட்டைகள் மருந்துக்கு ஏற்றதல்ல, கடுக்காயின் தோலே மருந்தாகும்.

பயன்படுத்தும் முறை
கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *