Health

நாளை சூரிய கிரகணம்! அதிகம் பாதிக்கப்படும் உறுப்பு எது தெரியுமா?

இந்த ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம்  ஏப்ரல் 8 ஆம் திகதியான நாளை திங்கட்கிழமை அன்று நிகழ இருக்கிறது.

நாளை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சூரிய கிரகணம் இரவு 9:12 மணிக்கு தொடங்கி அதிகாலை 1:25 மணிக்கு முடிவடையும்.

இந்த கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 39 நிமிடங்கள் இருக்கும். சூரிய கிரகணத்தின் சூதக் காலம் 12 மணி நேரத்திற்கு முன் தொடங்குகிறது.

கிரகண காலத்தில் யாரும் உணவு, தண்ணீரை உட்கொள்ளக்கூடாது என சொல்லப்படுகிறது. இப்படி செய்வதால் ஜீரண சக்தி பலவீனமடைந்து நோய்வாய்ப்படுவார்கள் என்பது ஐதீகம். பிறகு கிரகணம் முடிந்தவுடன் குளித்துவிட்டு சாப்பிட வேண்டும்.

கிரகண காலத்தில் அனைத்து உணவு மற்றும் தண்ணீரிலும் துளசி இலைகளை போட்டு வைக்க வேண்டும்.

சூரிய கிரகணத்தினால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பு

சூரிய கிரகணத்தினால் அதிகமாக பாதிக்கப்படுவது தான் கண்கள் தான்.

அது கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்குமே இந்த பிரச்சினை உண்டாகும்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாகப் பார்க்கக் கூடாது.

கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது. வந்தாலும் சூரியனைப் பார்க்கக் கூடாது. இது கண்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *