Health

நம் விரும்பி சாப்பிடும் பாஸ்தா உண்மையாகவே ஆரோக்கியமற்ற உணவா?

பிரபலமான மேற்கத்திய உணவுகளில் ஒன்றான பாஸ்தாவை இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து உண்கிறார்கள்.
ஆனாலும் இதை ஆரோக்கியமற்ற உணவாக கருதும் போக்கு பலரிடமும் இருக்கிறது.

அதுகுறித்து சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

பாஸ்தா உணவிற்கு கார்போஹைடரேட்டோடு தொடர்பு இருப்பதால் பலரும் இதை சாப்பிட தயங்குகிறார்கள்.

ஆனால் சரிவிகித உணவில் பாஸ்தாவை சேர்ப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என உலகமே ஒத்துக்கொண்டுள்ளது.

பாஸ்தாவை அளவாக உட்கொண்டால், கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை குறைவாகவே எடுத்துக்கொள்வோம்.

இதனால் தேவையின்றி உடல் எடை அதிகரிப்பது ஒழுங்குப்படுத்தப்படும். பாஸ்தா உணவு ஆரோக்கியமற்றது என்று சொல்லப்பட்டு வரும் பொய்யை உடைக்க வேண்டிய நேரமிது.

பாஸ்தாவையும் சுவைக்க வேண்டும்; அதே சமயத்தில் சரிவிகித டயட்டையும் பராமரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அதன் அளவிலும் சமைக்கும் முறையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட பாஸ்தா அளவில், நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், லீன் புரொட்டீன் ஆகியவற்றை சேர்க்கும் போது ஊட்டச்சத்து மிக்க உணவாக அது மாற்றமடைகிறது. சுவையை சமநிலைப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தில் சமரசம் செய்து கொள்ளாத திருப்தியான உணவு நமக்கு கிடைக்கிறது. ஒரேடியாக பாஸ்தாவை தவிர்ப்பதற்குப் பதிலாக அளவாக பயன்படுத்துங்கள் என்றே கூறுகிறோம்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *