Health

தூங்காமல் விடிய விடிய வேலை செய்பவரா? எச்சரிக்கை

ஐ.டி.நிறுவனங்கள், இரவு நேர ஊழியர்களை இப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்துகிறது.

வீட்டில் இருந்தே பணியாற்றும்  பலர் இரவில் தூங்குவது இல்லை என்பது ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

வேலை பளு அதிகரிப்பு, பகலில் குடும்ப வேலை, இரவில் அலுவலக வேலை என 24 மணிநேரத்தில் 18 மணிநேரம் வேலையிலேயே கழிந்துவிடுகிறது.

சரியாக தூங்கவில்லை யென்றால், இதயநோய், மன அழுத்தம், சோர்வு ஆகிய பாதிப்புகளுடன் சராசரி உடல் இயக்கமும் தடைப்பட வாய்ப்புள்ளது.

என்னதான் கடுமையாக உழைத்து, செல்வத்தை சேர்த்து வைத்தாலும், அதை அனுபவிக்க உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். உடலை சரியாகப் பராமரிக்க, சரியான அளவுக்கு ஓய்வு அவசியம்.

வீட்டிற்குள்ளேயே தினமும் கொஞ்ச நேரமாவது உடற்பயிற்சி செய்யலாம். உடல் இயக்கம் சீராகி, தூக்கத்தை வரவழைக்கும்.

உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், நடைப்பயிற்சி, தியானம் செய்வது நல்லது.

இரவில், எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது.

மிகக்குறைவாகவோ, மிக அதிகமாகவோ சாப்பிடுவதை இரவில் தவிர்க்க வேண்டும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *