Health

டயட்-ல இருக்கீங்களா? அருமையான ஓட்ஸ் தோசை செஞ்சு சாப்பிடுங்க

ஓட்ஸ் தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும்.

இந்த ஓட்ஸ் தோசைக்கு தேங்காய் சட்னி அட்டகாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் – 1/2 கப்
உப்பு – சுவைக்கேற்ப
சீரகம் – 1/2 டீஸ்பூன்
அரிசி மாவு – 1/4 கப்
ரவை – 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
துருவிய இஞ்சி – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
தயிர் – 1/4 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – 1 1/2 கப்

செய்முறை
முதலில் ஓட்ஸை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின் அரைத்த ஒட்ஸ் பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் சீரகம், அரிசி மாவு, ரவை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், தயிர் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு நீர் போன்று கலந்து கலந்து கொள்ள வேண்டும். தோசை மாவானது ரவா தோசை பதத்தில் மிகவும் நீராக இருக்க வேண்டும்.

பின் அந்த மாவை 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, பேன் நன்கு சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்ற வேண்டும்.

அதன் பின் அதன் மேல் எண்ணெய் ஊற்றி, மொறுமொறுப்பாக வந்ததும், தோசையை எடுக்க வேண்டும்.

இதே போல் அனைத்து மாவையும் தோசைகளாக ஊற்றி எடுத்தால், சுவையான ஓட்ஸ் தோசை தயார்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *