Health

சுகப்பிரசவம் வேண்டுமா? கர்ப்ப காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்யுங்க

கர்ப்பிணி தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இது குழந்தைக்கும் தாய்க்கும் இருவருக்கும் நல்லது. வழக்கமான உடற்பயிற்சி கர்ப்பகாலங்களில் உண்டாகும் பல சிக்கல்களை தவிர்க்க உதவும்.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் தூக்கமின்மை, தசை வலி, அதிக எடை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.

கர்ப்பிணியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் இருக்கும் போதும் உடற்பயிற்சி அவசியம். ஆனால் என்ன மாதிரியான பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதை உடற்பயிற்சி நிபுணரிடம் கேட்டு செய்ய வேண்டும்.

உடலுக்கு செளகரியமான உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.

உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு பிரச்சனையாக இருந்தால் யோகா செய்யலாம். யோகா கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.

ஆனால் எந்த போஸ்கள் சிறந்தவை என்பதை கேட்டு அதை மட்டுமே செய்ய வேண்டும்.

கர்ப்பத்துக்கு முன்பு யோகா செய்யவில்லை என்றால் யோகா வகுப்பு செல்வதற்கு முன்பு மருத்துவரிடம் இது குறித்து பேசுவது பாதுகாப்பானது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *