Health

கோடை காலத்தில் உடல்சூட்டை தணிக்கனுமா? இதோ சூப்பர் ஐடியா

  1. நீர் மோரில் கருவேப்பிலையுடன் பொடியாக அரிந்த வெள்ளரித்துண்டு, மாங்காய், ஒன்றிரண்டாகத் தட்டிய இஞ்சி ஆகியவற்றைப் போட்டுப் பருகலாம்.
  2. கரும்புச்சாறு கோடைக்கு ஏற்ற சிறந்த பானம். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.
  3. பெண்கள் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் “பேக்’ போட்டுக் கொள்ளலாம்.
  4. வியர்வையை போக்கி ஃப்ரஷ் ஆக இருக்க நான்கு சொட்டு எலுமிச்சம்பழச் சாறை குளிக்கும் தண்ணீரில் சேர்த்து குளித்துப் பாருங்கள்.
  5. நுங்குகளை வாங்கி உரித்துக் கையால் பிசைந்து சர்க்கரை, பால், ஏலக்காய் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிட இயற்கையான ஐஸ்க்ரீம் தயாரித்து பருகலாம்.
  6. கோடை காலத்தில் குழந்தைகளுக்கு வேனல் கட்டிகள் வந்தால் கட்டிகள் மீது நுங்கை மசித்துத் தடவுங்கள்.
  7. நீராகாரம் அருமையான இயற்கையான பானம். காலையிலும்  சாப்பிட்டப் பிறகு அருந்தலாம்.
  8. கோடையில் மண்பானை நீரைக் குடிக்கிறீர்களா? அதில் சிறிது துளசி இலைகளைப் போட்டுப் பருகுங்கள். உடலுக்கும் நல்லது. உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
  9. மோர், இளநீர், எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள் என்று ஏதாவது ஒன்றை தினமும் அவசியம் பருகுங்கள்.
Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *