Health

கொரோனாவை விட ஆபத்தான ஏவியன் ஃப்ளூ ; மக்களே எச்சரிக்கை

கோவிட் பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து, ஒருவழியாக அதன் தாக்கம் குறைந்திருக்கிறது.  இந்தநிலையில் சமீபத்தில் ஏவியன் என்னும் பறவைக் காய்ச்சல் தொற்று உருவாகியிருப்பதாகவும் அது கோவிட் பெருந்தொற்றைக் காட்டிலும் ஆபத்தாக தொற்று என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏவியன் பறவைக் காய்ச்சல் என்பது பறவைகளிடம் இருந்து மனிதர்களைப் பாதிக்கும் ஒருவகை இன்ஃப்ளூயன்ஸா தொற்றாகும்.

இந்த வகை வைரஸால் கிட்டதட்ட 12 வகையான பறவைக் காய்ச்சல் உருவாகியிருப்பது அடையாளம் காணப்பட்டு இருக்கிறது.

இத்தகைய பறவைக் காய்ச்சலும் H5N1 மற்றும் H7N9 ஆகிய இரண்டு வைரஸ் திரிபுகளும் காரணமாக இருக்கின்றன. இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களைப் பாதித்து தீவிரமாகும்போது மரணத்தை ஏற்படுத்தும் மோசமான ஒரு இன்ஃப்ளூயன்ஸா ஃப்ளூ காய்ச்சலாகும்.

பொதுவான அறிகுறிகள்

  1. தொண்டை வலி
  2. இருமல்,
  3. தலைவலி,
  4. தசை வலி மற்றும் வீக்கம்
  5. கடுமையான காய்ச்சல் ஆகியவை ஏற்படும்.

இந்த தொற்று அடுத்தடுத்த நாட்களில் தீவிரமடைந்து வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி, கடும் சுவாசக் கோளாறுகள், நிமோனியா, மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் உண்டாகும்.

இந்த ஏவியன் வைரஸ் தொற்றை வெறும் ஆரம்ப கால அறிகுறிகளால் மடட்டும் கண்டறிந்து விட முடியாது. அதைத்தாண்டி ஆய்வகத்தில் சோதித்த பின்னரே கண்டறிய முடியும்.

கோவிட் சோதனையைப் போலவே சுவாசக் குழாய் சோதனையின் மூலம் இந்த பற்வைக் காய்ச்சல் தொற்றைக் கண்டறிய முடியும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *