Health

காலை சீக்கிரம் எழ முயற்சிப்பவரா? இதோ சூப்பர் டிப்ஸ்

நம்மில் பலர் காலையில் வேகமாக எழ முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்ற்னர்.

காலையில் வேகமாக எழுவதற்கு நம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால் போதும். நிச்சயம் அதிகாலையில் நேரமாக எழுந்து, பொறுமையாக அன்றைய நாளை கடக்க முடியும்.

இந்த குறிப்புகள் நீங்கள் தினமும் சீக்கிரம் எழுந்திருக்க உதவும்.

  1. காலையில் வேகமாக எழ வேண்டுமெனில் இரவில் சரியான நேரத்தில் நிம்மதியாக உறங்க வேண்டும்.
  2. தூங்க செல்லும் முன் குளியல் மேற்கொண்டால், இரவில் நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
  3. அதிலும் இரவில் சீக்கிரம் குளித்துவிட்டு தூங்கினால், காலையில் அலாரம் அடிப்பதற்கு முன்பே எழ முடியும்.
  4. படுக்கைக்கு சென்ற பின் படிப்பது TV பார்ப்பதை தவிர்க்கவும். 20 நிமிடங்களுக்குள் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால், தூக்கம் வரும் வரை எழுந்து ஏதாவது படிக்கவும். ஆனால் மொபைல் பார்ப்பதை தவிக்கவும்.
  5. நீங்கள் தினமும் பின்பற்றுவதற்கு ஒரு அட்டவணையை உருவாக்கவும். இதனால், காலையில் நேரத்தை வீணடிக்க உங்களுக்கு வாய்ப்பு குறைவாக இருக்கும்.
  6. நீங்கள் சீக்கிரம் எழுந்திருக்க பழகியதும், உங்கள் உடல் புதிய அட்டவணைக்கு பழகி, சரியான நேரத்தில் தூங்க பழகிவிடும். வழக்கத்தை விட 15 – 30 நிமிடங்கள் முன்னதாகவே படுக்கைக்குச் செல்ல முயற்சிக்கவும்.
  7. அதிகாலையில் எழுந்திருப்பதை ஒரு வேலையாக நினைக்க வேண்டாம்.
  8. அதற்குப் பதிலாக, மாலை அல்லது வார இறுதி நாட்களில் நீங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிடவும்.
  9. காலையில் எழுந்திருப்பதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், உங்கள் அலாரம் சத்தத்தை அதிகமாக வைக்கவும் (உதாரணமாக, உற்சாகமான பாடல் அல்லது உரத்த சத்தம்). அது உங்களை வேகமாக எழுப்பும்.
  10. ஒரு வாரம் சீக்கிரம் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். பின்னர், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று பாருங்கள்.
Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *