Health

காலையில் மின்னல் வேகத்தில் சமைக்க சமையல் டிப்ஸ்

மைக்ரோவேவ் அவன் சாதனத்தில் சமைக்கும்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் சமைப்பதற்கான சமையல் டிப்ஸ்…

  1. காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கி வேகவைக்க வேண்டும்.
  2. காய்கறிகளை வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும்.
  3. சுடுநீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவாகும்.
  4. உப்பை முதலிலேயே சேர்த்தால் காய்கறிகள் வறண்டு விடும். ஆதலால் அவை வெந்தபின்புதான் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.
  5. சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால்தான் பொங்கி வழியாமல் சீராக சமைக்க முடியும்.
  6.  உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற தோல் தடிமனான காய்களை முள்கரண்டியால் குத்தியோ அல்லது துண்டு துண்டாக வெட்டியோதான் அவனில் வைக்க வேண்டும்.
  7.  புழுங்கல் அரிசியில் சாதம் வைக்க, பச்சரிசியில் வைப்பது போலவே நேரம், அளவு வைக்கவேண்டும்.
  8. பாசுமதி அரிசியில் சமைக்கும்போது அரிசியும், தண்ணீரும் சேர்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் ‘மைக்ரோ-ஹை’யில் வைக்கவும்.
Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *